கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்தது என்ஐஏ ..!

Siva
திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:35 IST)
கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிகுண்டு வழக்கில் மேலும் நான்கு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும்  கோவையில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் சில இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவான சில ஆவணங்கள் சிக்கியதாகவும் அதன் அடிப்படையில் என்ஐஏ தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கோவை கார் சிலிண்டர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேர்களை  என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.  

ஜமீல் பாஷா உமரி, மவுலவி ஹுசைன் ஃபைசி, இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த சோதனையின் போது சில மின்னணு சாதனங்கள், மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும், மேலும்  6 லேப்டாப், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி (மெமரி) கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீசல் மானியம் ரத்து! கலவர பூமியான ஈகுவடார்! - அவசரநிலை பிரகடனம்!

வரிகளை வைத்துதான் உலக அமைதியை கொண்டு வந்தோம்! - ட்ரம்ப் பெருமிதம்!

நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி.. என்னென்ன நிபந்தனைகள்?

நவம்பர் 1 முதல் மீண்டும் 25% வரி.. டிரம்ப் அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்ச்சி..!

கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments