Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம்: 3 ஆவது நாளாக உண்ணாவிரதம்

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (10:25 IST)
நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நெய்வேலி என்எல்சியில் பணிபுரிந்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
வருகிற 7 ஆம் தேதி 7 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களில் பயிற்சி பெறாத தற்காலிக பணியாளர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுப்பி இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட முயன்றனர். 
 
அப்போது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல் தறையினர் கைது செய்தனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments