Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருகிறது ”பேய்ட்டி” புயல்? சென்னையை தாக்கும் என கணிப்பு

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (12:07 IST)
கடந்த மாதம் கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெய்யக்கூடும் என செய்திகள் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே காணப்படுகிறது.
 
கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே மக்கள் முழுதாக மீளாத நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாம். ஆம், வருகிற 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் மாறி தமிழகம் - ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் நகரும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 
முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
 
அப்படி இந்த புயல் கணிப்பின்படி உருவாகினால், இதற்கு தாய்லாந்து பேய்ட்டி என பெயர் சூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments