மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கியது யார்?: பிறந்து இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை!
மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணை கர்ப்பமாக்கியது யார்?: பிறந்து இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி 16 வயதே ஆன மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.
ஆம்பூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் அடிக்கடி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர்.
16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பெற்றோர்களிடன் கூறினர். இதனையடுத்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர் மருத்துவர்கள்.
இதனையடுத்து கடந்த 28-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிய அந்த பெண்ணின் பெற்றோர்கள் இறந்த குழந்தையை ஆம்பூர் அருகே பாலாற்றுப் படுக்கையில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறை மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியது யார் என கண்டறிந்து தண்டை வாங்கி கொடுக்க புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்துள்ளனர்.
குழந்தையின் டி.என்.ஏ மாதிரிகளை கைப்பற்றிய மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அதனை சோதித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அதனை வைத்து மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என காவல்துறையு உறுதியாக உள்ளது.