புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கனமழைக்கு வாய்ப்பா?

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (14:04 IST)
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி விட்டதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
 தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் அதாவது நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
அதன் பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மையத்தை இந்திய மாநில ஆய்வு மையம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.  
 
இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு உள்பட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments