Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: மாநில கல்விக் கொள்கை அறிக்கை

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (07:14 IST)
3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என மாநில கல்வி கொள்கையில் நீதிபதி முருகேசன் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு தமிழ்நாடு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வி தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட சில வழிகாட்டுதலை தெரிவித்துள்ளது.

அதில் முக்கியமாக 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த கூடாது என்றும், ஆனால் அதே நேரத்தில் பிளஸ் ஒன் பொதுத்தேர்வு தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் சேருவதற்கு பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் போதாது என்றும், பிளஸ் ஒன் மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வழக்கம் போல் நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளது போல மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் போது படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே வகுப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments