சென்னை ரிசர்வ் வங்கிக்கிளைக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் இரண்டு லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் கடந்த 15ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பெரும்பாலான வங்கிகளில் 500 ரூபாய் விநியோகிக்கப்படவில்லை.
இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து இரண்டு லாரிகளில் சென்னை ரிசர்வ் வங்கிக்கிளைக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படும். எனவே, தமிழகம் முழுவதும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.