Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய 500 ரூபாய் நோட்டு திங்கட்கிழமை முதல் விநியோகம்

புதிய 500 ரூபாய் நோட்டு திங்கட்கிழமை முதல் விநியோகம்
, சனி, 12 நவம்பர் 2016 (19:22 IST)
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே வங்கிகளில் விநியோகப்பட்டு வருகிறது. தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகள் வரும் திங்கட்கிழமை முதல் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து புதிய 500 மற்று 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நேற்று முந்தினம் முதல் வங்கிகளில் பழைய நோட்டுகளுக்கு பதில் கொடுக்கப்படும் மாற்று ரூபாய் நோட்டுகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது.
 
ஆனால் 500 ரூபாய் நோட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் 100 ரூபாய் நோட்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களிலும் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வரும் திங்கட்கிழமை முதல் விஎஇயோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகள் பெற இன்னும் 2 வாரங்கல் ஆகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்பின் உண்மையான பெயர் தெரியுமா?: சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தான்!