Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாராய ஆலைக்கு செல்லும் தண்ணீரை திருப்பிவிடுவதா? தயாநிதி மாறனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (19:40 IST)
சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் என திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாராய ஆலைகளை திமுகவினர்களே நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் என தயாநிதி மாறன் கூறியிருப்பது இந்த ஆண்டின் உச்சபட்ச காமெடி என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 
 
தற்போது தமிழகத்தில் ஆறு முக்கிய மது ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறுய மதுபான ஆலைகள் யாருக்கும் சொந்தம் என்பதை தயாநிதி மாறன் தெரிந்து கொண்டு அதன்பின்னர் இதுபோன்று ஆவேசமாக பேசுவது அவருக்கும் அவரை சார்ந்த கட்சிக்கும் நல்லது என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
நந்தினி போன்ற மதுவுக்கு எதிராக போராடும் சமூக போராளிகள் டாஸ்மாக் கடைக்கு எதிராக உட்கார்ந்து போராடுவதற்கு பதில் மது ஆலைகளை மூட வலியுறுத்தி அந்த ஆலைகள் முன் உட்கார்ந்து போராடினால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கிடைக்கும். ஒன்று தானாகவே டாஸ்மாக் மூடப்படும் மற்றொன்று தண்ணீர் கஷ்டம் தீரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments