Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனின் வயதையாவது சரியா சொல்லுங்க முதல்வரே. நெட்டிஸன்கள் கிண்டல்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (22:57 IST)
தமிழக அரசு குறித்து சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். அவருக்கு அமைச்சர் வைகைசெல்வன் உள்பட பல அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆட்சி தொடரக்கூடாது என்றும் மீண்டும் தேர்தல் வரவேண்டும் என்று கமல் கூறிய கருத்துக்கு சசிகலா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 


இந்நிலையில்  சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார் இந்த விழாவில் பேசிய அவர், 'ஆட்சித் தொடரக்கூடாது என்று கமல்ஹாசன் பேசுகிறார். இதுவரை அவர் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா?  ஆட்சி மீது குற்றம் சாட்டுபவர்கள் என்ன குறை கண்டார்கள்?

விஸ்வரூபம் படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா.  கமல்ஹாசன் அந்த நன்றியை மறந்து பேசுகிறார். 65 வயதுக்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது என்று பேசினார்.

கமலின் தற்போதைய வயது 62 என்று இருக்கும்போது அவரது வயதை தவறாக கூறிய முதல்வரை கமல் ரசிகர்களும் நெட்டிஸன்களும் டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments