Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மாட்டுக்கறி திங்க கூடாது, ஆனா வெளிநாட்டுக்கு மட்டும் அனுப்பலாம்”..பாஜகவை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (12:55 IST)
நடிகர் சிவகுமார் குறித்து, பிரபல நடிகர் எஸ்.வி.சேகரின் டிவிட்டர் பதிவுக்கு, பின்னோட்டங்களில் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த கல்வி அறக்கட்டளை குறித்தான விழாவில், நடிகர் சிவக்குமார், மாணவர்களிடம் காபி, டீ ஆகியவை உடல் நலத்திற்கு கேடு எனவும், அதை குடிக்காதீர்கள் எனவும் கூறும் விதமாக, “என் குழந்தைகளா இருந்தா காபி, டீ குடிக்கமாட்டாங்க” என்று கூறினார்.

சிவகுமார் இவ்வாறு கூறியது குறித்து, பிரபல நடிகரும், பாஜகவின் உறுப்பினருமான எஸ்.வீ.சேகர், தனது டிவிட்டர் பக்கத்தில், சிவக்குமாரை கேலி செய்யும் விதமாக, “ ஆனா என் குழந்தைகள் காபி விளம்பரம் நடிக்கலாம்” என தெரிவித்திருந்தார்.

அதாவது சிவக்குமாரின் மகன்களான கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் பிரபல காபி நிறுவங்களின் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இதனை சுட்டிகாட்டும் விதமாக எஸ்.வி.சேகர் அவ்வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகரையும் பாஜகவையும் கேலி செய்யும் வகையில், பின்னோட்டங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த பின்னோட்டங்களில் ஒருவர், பாஜகவை விமர்சிக்கும் வகையில், ”எவனும் மாட்டுக்கறி திங்க கூடாது, ஆனா நாங்க வெட்டி கறியாக்கு வெளிநாட்டுக்கு ஏத்துவோம்” என பதிவிட்டு எஸ்.வீ.சேகரின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இது போன்ற பல வேடிக்கையான கமெண்ட்டுகள் அந்த பின்னோட்டங்களில் தென்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments