Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைகிறார்?

நடிகர் நெப்போலியன் பாஜகவில் இணைகிறார்?
, சனி, 20 டிசம்பர் 2014 (13:27 IST)
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன், பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
திமுகவில் பல்வேறு பதவிகளை வகித்த நடிகர் நெப்போலியன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.
 
திமுகவில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் கட்சியில் ஒதுக்கப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
 
பாஜக தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பாஜ கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பாஜகவில் சேருகிறார்கள்.
 
பொங்கலூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மணியும், நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் பாஜகவில் இணைகிறார்கள்.
 
முன்னதாக, இசை அமைப்பாளர் கங்கை அமரன், நேற்று மாலையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர்  தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர் இன்று மாலையில் கட்சித் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil