ஒருவாரம் நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தை மூட உத்தரவு: என்ன காரணம் தெரியுமா?

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (13:36 IST)
ஒருவாரம் நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தை மூட உத்தரவு:
நெல்லை மண்டல வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கக் கூடிய சூழலில் ஒரு வாரகாலம் அலுவலகத்தை மூடி வைக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருக்கிறது
 
நெல்லையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கராக பணிபுரியும் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
இதனால் அவர் பணி செய்யும் அலுவலகமான வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒரு வார காலம் மூடி வைக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் 60 அலுவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது
 
மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments