Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது முழுக்க முழுக்க பொய், யாரும் நம்பாதீங்க: நெல்லை டெபுடி கமிஷனர் டுவீட்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (09:22 IST)
இது முழுக்க முழுக்க பொய், யாரும் நம்பாதீங்க
சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் ஒரு தகவலை தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இது முழுக்க முழுக்க போய் யாரும் நம்ப வேண்டாம் என்று நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜூன் சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் 
 
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வதந்தியாக பரவி வருகிறது. அதில் பெண்கள் தனியாக ஆட்டோ அல்லது வாடகை காரில் பயணம் செய்வதற்கு முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அந்த வாகனத்தை காவல்துறை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இந்த தகவலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் இது உண்மையா என ஒரு டுட்டர் பயனாளி நெல்லை டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது: 
 
முழுக்க பொய். 
தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை.  பாதுகாப்பிற்காக “காவலன் SoS” செயலியை பயன்படுத்தவும் . 
 
“கண்ணால் காண்பதும் பொய் 
காதால் கேட்பதும் பொய் 
தீர விசாரிப்பதே மெய்”
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments