Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தேர்தல்.. இன்று தகுதி நீக்கம் செய்யும் வழக்கு.. நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா?

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:42 IST)
தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது தரப்பிடம் விசாரணை செய்து வருகிறார்கள்

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது

ரூபாய் 4 கோடி விவகாரத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்றைய விசாரணையில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அவருடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments