Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் மாணவிகள் உள்ளாடைகளை களையச் செய்த விவகாரம்: 5 பெண்கள் கைது

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (17:00 IST)
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் செய்த விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கடந்த ஞாயிறு அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தபோது கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்தி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது
 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது 
 
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டது. சர்ச்சைக்குரிய தேர்வு மையத்தின் ஜன்னல் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன என்பதும் இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments