கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

Mahendran
வியாழன், 4 ஜூலை 2024 (14:01 IST)
தமிழக முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கு என்ன சம்பந்தம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
நீட் தேர்வுக்கு எதிராக போராடும் அரசு கல்லூரி மாணவர்கள் ஒரு நாளாவது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு போராடினார்களா என்று கேள்வி எழுப்பி உள்ள நெட்டிசன்கள் மாணவர்களையும் தற்போது நீட் தேர்வு எதிராக போராட வைத்து விட்டார்கள் அரசியல்வாதிkஅள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டது மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் தான் என்றும் அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் மருத்துவ கல்லூரி வைத்திருப்பதால் அரசியல்வாதிகள் மட்டுமே இதுவரை நீட் தேர்வை எதிர்த்த நிலையில் தற்போது மாணவர்களையும் தூண்டிவிட்டு உள்ளனர் என்றும் கூறி வருகின்றனர். 
 
நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டால் நிச்சயம் செய்யப்பட்ட ஒன்று என்ற நிலையில் அந்த தேர்வை நீக்க முடியாது என்று தெரிந்தும், வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசியல்வாதிகள் இது போன்ற செயல்களை செய்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள்  கூறி வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments