நீட் தேர்வில் ஆர்வம் காட்டாத அரசுப்பள்ளி மாணவர்கள்.. கடந்த ஆண்டை விட குறைவான விண்ணப்பங்கள்..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (18:58 IST)
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான விண்ணப்ப குறைவான மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளதிலிருந்து தெரிய வருகிறது. 
 
தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைவாக அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து, 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர். ஆனால் இந்த  ஆண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுத போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 தற்போது மருத்துவ படிப்பை விட பல புதிய படிப்புகள் அறிமுகமானதை அடுத்து அதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதனால் தான் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments