Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குடிமகன்களுக்கு’ போர்க்கால நடவடிக்கையில் மது வழங்குக!: மது குடிப்போர் சங்கம்

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (13:01 IST)
நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும், நாளை முதல் தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


இதனால், தற்போது பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது.

நேற்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர், பெரும்பாலான அரசு மதுபான கடைகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடை ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால், மதுபானங்கள் வாங்கச் சென்ற குடிமகன்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குடிமகன்களுக்கு எளிய வகையில் மது கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசிற்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முன் வைத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் கூறுகையில், ”இன்று மதுகுடிக்க டாஸ்மாக்கிற்கு செல்லும் குடிமகன்கள் சில்லறைப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பலர் மது வாங்கக் கூட முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.

எனவே, குடிமகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்களில் இன்ரு 500 மற்றும் 1000 நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு மது வழங்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments