Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குருவுக்கும் தொடர்பு?: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குருவுக்கும் தொடர்பு?: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (15:25 IST)
தமிழக விவசாயிகளுக்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.


 
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பிராடு என கூறி விமர்சித்தார் எச்.ராஜா. மேலும் அய்யக்கண்ணு என் வீட்டில் வந்து கிடப்பார், ஆடி கார் வைத்திருக்கிறார் என பேசினார் எச்.ராஜா.
 
இதற்கு பதிலடி கொடுத்து அய்யாக்கண்ணு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா அய்யக்கண்ணுவை சீண்டும் விதமாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகழிடமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழக முதலமைச்சர் உடனடியாக விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments