Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு விலக்கு மசோதா...உறுதியளித்த ஆளுநர்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (15:48 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப  ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.

இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் இந்தச் சந்திப்பில்,  நீட் விலக்கு   மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments