Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுராந்தகம் அருகே பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: ஆசிரியர் தலைமறைவு

மதுராந்தகம் அருகே பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை: ஆசிரியர் தலைமறைவு
, வியாழன், 8 அக்டோபர் 2015 (14:17 IST)
மதுராந்தகம் அருகே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார், இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆசிரியர் தலைமறைவு ஆனதால் பரபரப்பு

திண்டிவனம், கட்டளை கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகள் கவுசல்யா தேவனூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து  வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை கவுசல்யா பள்ளிக்கு செல்வதற்காக தயாராகி கொண்டும் இருக்கும்போது அவரது  தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. பின்னர் பேசி முடித்ததும் கவுசல்யா கதறி அழுதுள்ளார்.

இது குறித்து பாட்டி கேட்ட போது எதுவும் சொல்லமல் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் திடீரென கவுசல்யா அவரது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.  இதனை பார்த்த பாட்டி அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

உடனடியாக வந்த  அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர், இவரது உடலை திண்டிவனம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, கவுசல்யா எழுதி வைத் திருந்த 2 பக்க கடிதம் இருந்தது. இந்த கடிதத்தை உறவினர்கள் கைப்பற்றினர்.

அதில், விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர் ரமேஷ் 'பாலியல்' தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்வதாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் கூறி இருப்பதாவது: நான் சொல்வது அனைத்தும் பைபிள் மேல் சத்தியமாக உண்மை. என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரமேஷ். அவர் நல்லவர் கிடையாது. அதை எப்படி...  
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
webdunia
சொல்வது என்பது தெரிய வில்லை. ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர் என்னிடம் தப்பாக நடக்க நினைத்தார். தவறாக நடந்தார். என்மேல் கை வைத்து பாலியில் தொல்லை கொடுத்தார்.

ஆசிரியர் ரமேசுக்கு இதற்கான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் மட்டும் அல்ல மேலும் பலரிடம் தவறாக நடந்து உள்ளார். நான் சொல்வதை நம்பவில்லை எனில், நீங்கள் மற்ற மாணவிகளிடம் ஆசிரியர் ரமேஷ் பற்றி கேளுங்கள்.நான் உயிரோடு இருந்து கூறினால் நம்புவீர்களா என்று தெரியவில்லை.

ஆசிரியர் ரமேஷ் இந்த மாதிரி நடந்துகொண்டதை நினைத்து தினம் தினம் அழுவேன். சந்தோஷமாக இருக்கமாட்டேன். இதற்கெல்லாம் ஒரே முடிவு நான் இறப்பதுதான். அதனால் தற்கொலை செய்கிறேன், இது அனைத்தும் உண்மை., என்னை படைத்த கடவுள் மேல் சத்தியம். எனக்கு பிடிச்சவங்க மேல சத்தியம். என் சாவுக்கு ஆசிரியர் தான் காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இதனால், ஆத்திரம் அடைந்து கிராம மக்கள் கவுசல்யாவின் உடலுடன் செய்யூர் - மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மாணவியின் பிணத்துடன் கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. மதியம் 12 மணிக்கு பின்னரே டி.எஸ்.பி. சிவசங்கரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அப்போது போலீஸாரை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவிக்கு தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.தொடர்ந்து கிராம மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.  ஆனால், மாணவியின் உடலை எடுக்காமல்  கிராம மக்கள் போலீசாருடன் செய்யூர் - மதுராந்தகம் சாலையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட் டனர்.
 
இதைத் தொடர்ந்து, காஞ்சீபுரத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட கமாண்டே போலீசார் குவிக்கப் பட்டனர். கிராம மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.மாணவி குற்றம் சாட்டி இருக்கும் ஆசிரியர் ரமேஷ் இன்று பள்ளிக்கு வரவில்லை என்றும் அவர் தலைமறைவனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil