Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:28 IST)
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் நேற்று இரவு கொரோனாவுக்கு பலியான செய்தி அதிமுகவை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருசில விஐபிகள் பலியாகி உள்ள நிலையில் அமைச்சர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் கொரோனாவால் பலியான அமைச்சர் துரைக்கண்ணு உடல் இன்று அவரது சொந்த ஊரான ராஜகிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும்  மேலும் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அவரின் மறைவு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக வேளாண் அமைச்சர் பாபநாசம் திரு.துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் அதிமுகவினர்- குடும்பத்தார் - நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கொரோனா இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. அனைவரும் எச்சரிக்கையோடு இருப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments