Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளெஸ்டர் அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் நஞ்சுண்டாபுரம், நரசீபுரம் அணிகள் முதலிடம்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (19:49 IST)
‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவை முன்னிட்டு கோவை ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்ற ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் நரசீபுரம் அணியும் முதலிடம் பிடித்தன. 
கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் விளையாட்டு திருவிழாவை ஈஷா அவுட்ரீச் அமைப்பு 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு 15-வது ஈஷா கிராமோத்வப் போட்டிகள் தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
அதன் ஒருபகுதியாக, கோவையில் தொண்டாமுத்தூர், காரமடை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளெஸ்டர் அளவிலான வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள் ஆக.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான கிராம அணிகள் பங்கேற்றன. தொண்டாமுத்தூரில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி முதல் இடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் மற்றும் ரங்காநகர் ராயல், தீத்திபாளையம் அணி மூன்றாம் இடத்தையும், மத்வராயபுரம் அணி நான்காம் இடத்தையும் பெற்றது. இதை போலவே பெண்களுக்காக நடைபெற்ற த்ரோபால் போட்டியில் முதலிடத்தை நரசீபுரம் அணியும், இரண்டாம் இடத்தை தேவராயபுரம் அணியும், மூன்றாம் இடத்தை சின்ன தடாகம் அணியும் மற்றும் நான்காம் இடத்தை காருண்யா அணியும் பெற்றது. 
 
வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளரும்,  தொண்டாமுத்தூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான திரு. டி.ஏ. ரவி, வெள்ளிங்கிரி உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு.டி.குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள்  பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 
இதை போலவே பொள்ளாச்சியில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான வாலிபால் போட்டியில் தேவனாம்பாளையம் அணி முதலிடத்தையும், கொண்டேகவுண்டன் பாளையம் சுடர்-ஏ அணி இரண்டாம் இடத்தையும், சிவிசி செட்டிபுதூர்- ஏ அணி மூன்றாம் இடத்தையும், மீனாட்சிபுரம் அணி நான்காம் இடத்தையும் பெற்றது. 
 
மேலும், காரமடை கிளெஸ்டர் அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளியங்காடு – ஏ மற்றும் பி அணி முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தையும், காரமடை அணி மூன்றாம் இடத்தையும், வீரபாண்டி அணி நான்காம் இடத்தையும் பெற்றது. 
கிளெஸ்டர் அளவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன. 
‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் இறுதிப் போட்டிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடைபெறும். வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments