Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை மந்திரியாக்க குட்டிகர்ணம் போடுகிறார் ராம்தாஸ்: நாஞ்சில் சம்பத்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (21:45 IST)
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து திமுக உள்பட ஒரு சில கட்சிகள் வயிற்றெரிச்சலும், சில கட்சிகள் அதிர்ச்சி அடைந்தும் அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. அதிமுகவையும் முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்த பாமக ராமதாஸ் அவர்களால் எப்படி அவர்களுடன் கூட்டணி வைக்க முடிந்தது என்று சமூக வலைத்தள பயனாளிகளும், தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியை நாஞ்சில் சம்பத்தும் விமர்சனம் செய்துள்ளார். அவர் இந்த கூட்டணி குறித்து கூறியபோது, ' தன் மகனை எப்படியாவது மத்திய மந்திரியாக்கிப் பார்க்க ராமதாஸ்  மெகா குட்டிக்கரணம் போட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
 
அதேபோல் அதிமுக குறித்து கூறியபோது, தங்களை விற்றுக் கொண்டவர்கள் கூடி நின்று, அதற்கு கூட்டணி என்று பெயரிட்டுள்ளனர் என்று தெரிவித்தார். டிடிவி தினகரன் குறித்து கூறியபோது, 'அரசியலில் டிடிவி தினகரன் ஒரு விளையாட்டுப் பிள்ளை என்றும், அறிவார்ந்த அரசியல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட தினகரன், இப்படி தனக்குத் தானே சுவரில் மோதிக் கொண்டு காயப்பட்ட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
 
அரசியலில் இருந்து தற்போது அவர் ஒதுங்கியிருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அழைத்தால் அக்கட்சிக்கு பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments