Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா சுப்ரமண்யனைப் பாராட்டித் தள்ளிய நாஞ்சில் சம்பத்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:19 IST)
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யனை திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பாராட்டியுள்ளார்.

புதிதாக அமைந்துள்ள திமுக அமைச்சரவையில் அதிக கவனத்தைப் பெற்றவராக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் உள்ளார். கொரோனாவை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு பாதிப்பு எண்ணிக்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர் இப்போது தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பணிகளை மேற்பார்வையிட்ட அவர்  15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு நடந்தே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இதுபற்றி திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ‘மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள். அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்’ என பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments