Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு

25 வருட சிறை வாழ்க்கை; விடுதலை வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையத்தில் நளினி மனு

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (12:13 IST)
பல வருடங்களாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.


 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
பல வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மனு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்நிலையில், தேசிய பெண்கள் ஆணையத்திற்கு நளினி மனு அனுப்பியுள்ளார்.
 
“இந்தியாவிலேயே 25 ஆண்டுகள் சிறையில் இருந்த சிறைவாசி நான். மற்ற மாநில சிறைகளில் 10 அல்லது 14 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பல பெண்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நான் கடந்த 25 ஆண்டுகளாக சாதாரண பெண்ணாக குடும்ப வாழ்க்கையை வாழவில்லை. லண்டனில் வசிக்கும் என் மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். எனவே தேசிய பெண்கள் ஆணையம், இந்திய அரசியலைமைப்பு சட்டம் 72-ஐ பயன்படுத்தி, என்னை விடுதலை செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments