நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு: என்ன காரணம்?

Mahendran
புதன், 12 பிப்ரவரி 2025 (12:12 IST)
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல், பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்  துறைமுகத்திற்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல், கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
மழை காரணமாக நிறுத்தப்பட்ட இந்த கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வானிலை சீர் அடையாததால் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கப்பல் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
 
இந்த நிலையில், தற்போது தொழில் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கப்பல் சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் சேவை தொடங்கும் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இன்று முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments