Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் எண்ணிக்கை குறைவு: நாகை - இலங்கை கப்பல் சேவையில் மீண்டும் சிக்கல்..!

Mahendran
புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:36 IST)
நாகையிலிருந்து இலங்கைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக வாரத்திற்கு மூன்று நாளாக மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை  இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் பருவநிலை மாற்றம், பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சில நாட்களில் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து மீண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நாகை - காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை தொடங்கிய நிலையில் முதல் நாளில் நாகையிலிருந்து 44 பேர் இலங்கை சென்ற நிலையில் அதில் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நேற்று நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு வெறும் ஐந்து பேர்கள் மட்டுமே சென்றதாகவும் இலங்கையில் இருந்து நாகைக்கு 14 பேர்கள் மட்டுமே பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது தினமும் இயங்கி வரும் நாகை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நாகை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இருக்கும் என்றும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் பயணிகள் வருகையை பொருத்து தினமும் கப்பல் சேவை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த 2 பக்தர்கள் உயிரிழப்பு.. கூட்ட நெரிசல் காரணமா?

47 ஆயிரம் பள்ளிக்கல்வித்துறை தற்கால பணியாளர்கள் நிரந்தரம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

மீண்டும் 13 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.. துப்பாக்கி சூடு நடத்தியதால் அதிர்ச்சி..!

Work From Homeனு சொல்லிட்டு இழுத்து மூடிய கம்பெனி! ஓவர் நைட்டில் வேலை இழந்த 2000 ஊழியர்கள்!

சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments