Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் உறுதிமொழி எடுக்க நாம் தமிழர் வேட்பாளர் தடுமாற்றம்!

Sinoj
செவ்வாய், 26 மார்ச் 2024 (14:46 IST)
இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, நாம் தமிழர் வேட்பாளர்  டாக்டர் கெளசிக்  தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். 

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சமீபத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில், விருது நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் கெளசிக் போட்டியிடுகிறார்.
 
இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார்.  அதைத்தொடர்ந்து தேர்தல் உறுதிமொழியை  மாவட்ட தேர்தல் அலுவலர் வாசிக்க பின்  தொடர்ந்து   நாம் தமிழர் வேட்பாளர் கெளசிக் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 
 
டாக்டார் கெளசிக் ஓமன் நாட்டில் படித்தவர் என தகவல் வெளியாகிறது.
 
 சீமான் தூய தமிழைல் மேடைகளில் முழங்கி வரும் நிலையில், வேட்பாளர் தமிழில் படிக்கத் திணறியுள்ளது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அவர் தமிழில் பேசுவார் என்று அவருக்கு ஆதரவாகவும் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments