Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் குளிர் அலை – என் செல்வக்குமார் விளக்கம்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (07:09 IST)
சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் குளிரான வானிலைக் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும், சில தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர்.இவர் அவ்வப்போது மழை மற்றும் வானிலை ஆகிய விவரங்களைத் துல்லியமாக கணித்து வருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. சென்னைப் போன்ற தொழில் நகரங்களில் கூட குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கானக் காரணம் குறித்து என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் ‘இலங்கை தரைப்பகுதியில் நேற்று முன் தினம் காற்றழுத்த சுழற்சி நீடித்தது. இதுமட்டுமில்லாமல் சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இது காஷ்மீ்ர் பகுதியில் நிலவி வரும் குளிர் அலையை ஈர்க்கிறது. இச்சுழற்சி வட இந்தியாவை கடந்து தமிழக கடலோரப்பகுதியைக் கடந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சோமாலிய காற்றழுத்த சுழற்சியால் ஈர்க்கப்பட்டு பயனிக்கிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளில் குளிரை ஈர்த்து காற்று செல்கிறது. காலை நேரத்தைவிடவும் பகல் பொழுதில் காற்றின் வேகம் சற்று கூடுதலாக உள்ளது. இந்த காற்றின் வேகத்தைப் பார்த்து மீனவர்கள் அச்சப்பட வேண்டாம். அடுத்த இரு நாட்களில் இந்த பனி குறைய வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகமும் குறையும். மேலும் அந்தமான் அருகே காற்றழுத்த சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அப்போது இந்த குளிர் அலை குறையும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments