Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி உடன் மைத்ரேயன் சந்திப்பு.. மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா?

Mahendran
வியாழன், 12 செப்டம்பர் 2024 (11:45 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக பிரமுகர் மைத்ரேயன் சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில் மீண்டும் அவர் அதிமுகவில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்த மைத்ரேயனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2022 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கினார். இதனை அடுத்து மைத்ரேயன் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜகவில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த நிலையில் அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை மைத்ரேயன் சந்தித்துள்ளதாகவும் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பேட்டி அளித்த மைத்ரேயன் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments