Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசாரியை கொன்று கோவிலில் பணத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல்

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (18:31 IST)
தட்டார்மடம் அருகே கோவில் பூசாரியை கொலை செய்து கோவில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள பிச்சிக்குடியிருப்பு கிராமத்தில் மகாராஜா சுடலைமாடசாமி கோவில் உள்ளது. இதில் உடன்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த முத்து (65) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கோவில் அருகே தங்கியுள்ளார். இவருக்கு உதவியாக மூக்கம்மாள் (60) என்பவர் உள்ளார்.
 
மர்ம கும்பல் கோவில் உண்டியலை உடைத்தபோது தடுக்க வந்த பூசாரி முத்து மற்றும் மூக்கம்மாளை அருகிலிருந்த கட்டையால் பயங்கரமாக தாக்கினர். இதில் முகத்தில் தாக்கப்பட்ட முத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அக்கும்பல் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஓடி விட்டனர்.
 
செவ்வாயன்று காலையில் உயிருக்குப் போராடிய மூக்கம்மாள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments