Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து - மு.க.அழகிரி அதிரடி

திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து - மு.க.அழகிரி அதிரடி
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (17:20 IST)
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது.
 
அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள் என்றனர். நன்றி கெட்டவர்கள் என்று கூறிவிட்டு பிறகு கனிமொழி எம்.பி. பதவிக்காகச் சென்று பிச்சை எடுத்தார்கள். மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்கிறார்கள்.
 
அதனால்தான் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கையே இல்லை என்கிறேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil