Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் மகள் எந்த கட்சியிலும் இணையவில்லை: வீரப்பன் மனைவி மறுப்பு

என் மகள் எந்த கட்சியிலும் இணையவில்லை: வீரப்பன் மனைவி மறுப்பு

என் மகள் எந்த கட்சியிலும் இணையவில்லை: வீரப்பன் மனைவி மறுப்பு
, வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (00:19 IST)
நாங்கள் தற்போது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்ல. அமைதியான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளோம் என்று வீர்ப்பன் மனைவி முத்துலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

 
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துவிட்டதாக, சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் தகவல் வெளியானது.
 
இது குறித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சில காரணங்களுக்காக நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, எனது மகளுக்கு உதவுவதாக சில அரசியல் கட்சியினர் அழைத்தனர். அப்போது திருமாவளவன் சந்திக்க இருப்பதாக சிலர் எனது மகள் விஜயலட்சுமியை அழைத்து சென்று, அவரது கட்சியில் இணைய வைத்தனர்.
 
உதவிக்காக அழைத்தவர்கள், என் மகள் விஜயலட்சுமியையும் மேடையில் ஏற்றி கொடியை பிடிக்கும்படி செய்து விட்டனர். இந்த சம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அதை நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
 
இந்த நிலையில், நாங்கள் தற்போது எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்ல. அமைதியான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டுள்ளோம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil