Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இசைக் கலைஞர் மேண்டலின் சீனிவாஸ் மரணம்

பிரபல இசைக் கலைஞர் மேண்டலின் சீனிவாஸ் மரணம்
, வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (12:59 IST)
பிரபல இசைக்கலைஞர் மேண்டலின் சீனிவாஸ் கல்லீரல் பாதிப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 45.

மாண்டலின் சீனிவாஸ் கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3 ஆம் தேதி அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 09.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 45.

மேண்டலின் சீனிவாஸ் 1969 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள பாலகோலில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை மேண்டலின் சத்யநாராயணா.

சீனிவாஸ் தனது 6 வயது முதல் மேண்டலின் தனது தந்தையுடன் இசைப் பயனத்தைத் தொடங்கினார். அவரது தம்பி ராஜேஷும் மேண்டலின் கலைஞர்.

சீனிவாஸ் 1994 ஆம் மே 27 ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. யுவஸ்ரீக்கும் மேண்டலின் சீனிவாஸ்க்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்தானது.

சீனிவாஸ் 1988ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர், மேலும் சங்கீதா ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil