Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா இரங்கல்

மேண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா இரங்கல்
, சனி, 20 செப்டம்பர் 2014 (10:06 IST)
இசைக் கலைஞர் மேண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- 
 
“மேண்டலின் சீனிவாசின் திடீர் மறைவை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உலகம் முழுவதும் இந்தியாவுக்கு, மேண்டலின் சீனிவாஸ் புகழ் தேடி தந்தார்.
 
மேண்டலின் என்றாலே உடனடியாக சீனிவாஸ்தான் நினைவுக்கு வருவார். சாவின் கோரப்பிடி இளம் வயதிலேயே அவரை பறித்து சென்று இருக்கிறது.
 
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு, குறிப்பாக அவரது ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.“  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேண்டலின் சீனிவாசின் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil