Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைகள் துண்டிக்கப்பட்டும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டும் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு- காவல்துறை விசாரணை!

J.Durai
திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:37 IST)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். 
 
சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்தக் கறைகள் ஏதுமில்லாத நிலையில் வேறு எங்கோ கொலை செய்து விட்டு மருத்துவமனையில் பயன்படுத்துவது போன்று பச்சை நிற படுக்கை விரிப்பால் சடலத்தை சுற்றி கொண்டு வந்து வீசி சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
 
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த அடையாளத்தை கண்டறியும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர் பற்றிய விவரங்களை சேகரித்து ஏதேனும் புகார் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மேலும் சடலம் கண்டெடுக்க இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை கொண்டும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments