Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக நகர் மன்ற தலைவர் மீது காெலை வழக்கு

அதிமுக நகர் மன்ற தலைவர் மீது காெலை வழக்கு

அதிமுக நகர் மன்ற தலைவர் மீது காெலை வழக்கு
, சனி, 11 ஜூன் 2016 (10:48 IST)
ஆத்தூர் நகராட்சி தலைவர் உமாராணி மீது போலீசார் கொலை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, அம்பேத்கர் நகரை   சேர்ந்த இராமசாமி சாலைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
 
அதிமுகவை சேர்ந்த ஆத்தூர் நகர மன்ற தலைவர் உமாராணியிடம், கடந்த 2005 ஆம் ஆண்டு, தனது மாமியார் பாப்பாத்தியின் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.2.80 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
 
மேலும், கணேசன், காந்தி, செல்லம், பொன்னம்மாள் உள்ளிட்ட 16 பேரிடம் மொத்தம் 7.81 இலட்சம் கடன் பெற்றுள்ளார்.
 
வாங்கிய கடனுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த கடன் தொகைக்கான வட்டி, அசல் என மொத்தம் 23.85-இலட்சம் ரூபாய் தொகையை சத்யாவிடம் கொடுத்து கொடுத்துவிட்டு, அவர்களிடம் தனது தாயாரின் வீட்டு பத்திரத்தை கேட்டுள்ளார்.
 
அதற்கு, இதுவரை வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளாய், அசலை கொடுத்தான் தருவேன் நகர்மன்றத் தலைவர் உமாராணி மிரட்டியுள்ளார்.
 
இது குறித்து, ஆத்தூர் காவல் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் உமாராணி மீது இராமசாமி புகார் கொடுத்தார். போலீசார் புகாரை பெற மறுத்துவிட்டனர்.
 
இதனால், தனது புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இராமசாமி வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆத்தூர் நகர் மன்றத் தலைவர் உமாராணி மீது மற்றும் தவறு செய்தவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
 
அதன்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் உமாராணி அவரது கணவர் பிச்சக்கண்ணன், உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"கும்புடுறேன் சாமி" - வருத்தெடுத்த ராமதாஸ்