Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை அறிமுகப்படுத்தியதே நாங்கள்தான் - கே.பி.முனுசமி அதிரடி

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (09:28 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.


 

 
இரட்டை இலை தொடர்பான விசாரணை நேற்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் நவம்பர் 1ம் டேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
 
இந்நிலையில், விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்துபேசிய கே.பி.முனுசாமி “ நாங்கள் முழுமையான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளோம். ஆனால், தினகரன் தரப்போ போலியான ஆவணங்களை சமர்பித்து இந்த விசாரணையை தாமதப்படுத்தி வருகிறது. எங்களுக்குதான் இரட்டை இலை கிடைக்கும். அதிமுகவை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அதை வளர்த்தவர் ஜெயலலிதா. எனவே, யாருடைய தயவிலும் நாங்கள் ஆட்சி நடத்த வேண்டியதில்லை. 1998ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை அறிமுகப்படுத்தியதே நாங்கள்தான். டெல்லியில் வேண்டுமானால் பாஜக ஆட்சி நடத்தலாம். ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது” என அவர் தெரிவித்தார்.
 
முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பாஜகவிற்கு ஆதரவாக நடந்து வரும் நிலையில், கே.பி.முனுசாமி இப்படி கருத்து கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments