Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமல்ஹாசனுக்காக தனது கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (07:26 IST)
நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் உள்ள லோகோ ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோவை போலிருக்கிறது என்ற கருத்து வெளியாகிய நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.  
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின்  லோகோ போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகின. 
 
இந்நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி,  எங்களின் கட்சியின் கொடியில் உள்ள சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய கொடியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. கமல்ஹாசன் ஒரு ஜனநாயக கோவில் கட்ட எங்களின் சின்னத்தை பயன்படுத்த இருக்கிறார். அதனால் இந்த சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments