Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் வைகோ கடும் தாக்கு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் வைகோ கடும் தாக்கு
, செவ்வாய், 7 ஜூலை 2015 (22:46 IST)
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தை கண்டித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அப்போது, மதிமுக பொதுச் செயாலளர் வைகோ பேசியதாவது:-
 
தமிழர அரசு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலம் பேரிடியாகத் தமிழர்கள் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்கள் பொது நிறுவனங்களுக்கு, தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் முல்லைப்பெரியாறு போன்ற நீர்த்தேக்கங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று மத்திய அரசின் உள்துறை தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
ஈழத்தமிழர்களுக்குக் கேடு செய்யவும், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையும், உளவுத்துறையும் விடுதலைப்புலிகளின் மீது பொய்யான அபாண்டமான புகார்களைக் கூறி புலிகள் அமைப்புக்குத் தடையை நீட்டித்துக் கொண்டு வருகின்றது.
 
தற்போது தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிர மதவாத அமைப்புகளாலும், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைப் கோருவதாகத் தெரிவித்து இருப்பது அக்கிரமம் ஆகும்.. இதனை ஜெயலலிதாவிற்கு தெரிந்துதான் உச்சநீதிமன்றத்தில் கூறினார்களா, அல்லது தெரியாமல் கூறினார்களா.
 
விடுதலைப்புலிகளால் பெரியாறு அணைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்.
 
கேரள அரசியல் கட்சிகளே அணையை உடைத்து விட்டு, நக்சலைட்டுகள் மீதும் தீவிரவாத அமைப்புகள் மீதும், ஏன் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதும் பழிசுமத்தி விட்டுத் தப்பித்துக் கொள்ளும் வழியைத் தமிழக அரசே ஏற்படுத்திக் கொடுப்பது மன்னிக்க முடியாத செயல் ஆகும். இந்த விவகாரத்தில், அறியாமல் செய்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil