Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வந்தது சிக்கல் - அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் ரத்து

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (15:34 IST)
உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக, அவரின் தந்தையும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் அறிவித்துள்ளார்.


 

 
உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் ஆகியோர் இடையே கடந்த சில மாதங்களாகவே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. 
 
இந்நிலையில், அடுத்த வருடம்  நடக்கவுள்ள  உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவ் ஆதரவு பெற்றவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் அகிலேஷ்-முலாயம் சிங் ஆகியோருக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது.
 
எனவே, அகிலேஷ் யாதவ் தனியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தார். எனவே, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், கட்சி விரோத போக்கை கடைபிடித்ததாக கூறி அவரையும் அவரது சோகதரர் ராம்கோபால் யாதவையும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முலாயம் சிங் யாதவ் நேற்று உத்தரவிட்டார்.
 
மொத்தம் உள்ள 229 சமாஜ்வாடி எம்.எல்.ஏக்களில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து தனது பலத்தை காட்ட தனது வீட்டில் அவர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.  இந்த கூட்டத்தில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என முலாயம் சிங் எச்சரித்தும் அனைவரும் கலந்து  கொண்டனர்.
 
இந்த கூட்டம் முடிந்த பின் அகிலேஷ் யாதவ் தனது தந்தையை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் ராம்கோபால் மீதான சஸ்பெண்டை நீக்கம் செய்து முலாயம் சிங் உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments