Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போய் விடாதீர்கள்! முழு கடையடைப்பை ஒட்டி சினிமா காட்சிகள் ரத்து

போய் விடாதீர்கள்! முழு கடையடைப்பை ஒட்டி சினிமா காட்சிகள் ரத்து
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (23:22 IST)
நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து அடுத்து திரையரங்குகளின் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

 
காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடையடைப்பு - ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.
 
இந்த கடையடைப்பிற்கு வணிகர்கள், விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள இந்தப் போராட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   இதையடுத்து நாளை காலை முதல் மாலை வரை திரையரங்களுகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய 1 லட்சம் பேர்