Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு : பள்ளிகளுக்கு விடுமுறை

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு : பள்ளிகளுக்கு விடுமுறை

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை  இடிப்பு : பள்ளிகளுக்கு விடுமுறை
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (11:32 IST)
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படவுள்ளதால், அந்த பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


\

 
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 28–ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக இறந்தனர்.
 
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. 
 
இதையடுத்து, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. இதையொட்டி கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 
 
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து தகர்க்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அவர்கள் கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி வந்தனர்.
 
இந்த நிலையில் நாளை இந்த 11 மாடி கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்து இருப்பதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
 
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள் அங்கு நிறுத்தப்படவுள்ளன. அதேபோல், அருகிலிருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மவுலிவாக்கத்தில் உள்ள தனியார்  மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுதுவதற்கு பயிற்சி பெற்று வரும் ஜெயலலிதா