Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (16:02 IST)
நெல்லையில் மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து அருகே பாலாமடை என்ற பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்ததாக தெரிகிறது 
 
மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 
 
நர்சிங் படித்து வந்த அருணா, அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் செய்ததாகவும் திருமணத்திற்கு அவரது தாய் ஏற்பாடு செய்த நேரத்தில் காதல் விவகாரம் தாய்க்கு தெரியவந்ததை அடுத்து அவர் ஆத்திரத்தில் மகளை கொலை செய்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை கொன்ற தாயிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments