Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் வெறிச்செயல்...

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (13:14 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஆதனூரில் வசித்துவந்தவர் சதீஷ்குமார்(32). அங்குள்ள பகுதியில் கூலிவேலை செய்துவருகிறார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மண்னிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சதீஷ்குமாருக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையில் சண்டை எழுந்துள்ளது. இதனால் கோபமுற்ற சுஷ்மிதா இந்திரா நகரில் வசுத்துவரும் தனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். 
 
இதனால் தனது மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்று சுஷ்மிதாவை தன்னுடன் வந்து குடும்பம் நடத்தவருமாறு அழைத்துள்ளார். ஆனால் மாமியார் சித்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை அனுப்ப மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சதீஸ்குமாருக்கும் மாமியார் சித்ராவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.அப்போது ஆத்திரமடைந்த சதீஸ்குமார் மறைத்து வைத்திருந்த காற்கறி வெட்டும் கத்தியால் மாமியாரை கண்படி குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
 
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த சித்ரா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக செங்கல்பட்டில்,உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தற்போது சதீஸ்குமாரை கைதுசெய்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments