Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் மகளிடம் தகராறு; அடித்து கொன்ற மாமியார்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (14:36 IST)
விருதுநகர் அருகே குடிபோதையில் மகளிடம் தகராறு செய்த மருமகனை, மாமியார் உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் பால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். செல்லப்பாண்டி குடிப்பழக்கம் உள்ளவர். சம்பவத்தன்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 
 
இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்லப்பாண்டி மனைவியின் தாய் அவரிடம் கேட்டுள்ளார். அதில் மருமகனுக்கும், மாமியாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாமியார் மருமகனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments