Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’முதல்வர் வேட்பாளராக கருணாநிதியை விட ஸ்டாலினுக்கே ஆதரவு அதிகம்’ - ஜூனியர் விகடன்

’முதல்வர் வேட்பாளராக கருணாநிதியை விட ஸ்டாலினுக்கே ஆதரவு அதிகம்’ - ஜூனியர் விகடன்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:47 IST)
திமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஜூனியர் விகடன் இதழ் நடத்திய கருத்து கணிப்பில், கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளது.

புகைப்படம் : நன்றி - ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் செயல்பாடு, ஜெயலலிதா தலைமையிலான அரசின் செயல்பாடு குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், ஜூனியர் விகடன் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கணிப்பை ஒன்றை நடத்தியது. மொத்தம் 16,846 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
 
இதில் கருணாநிதிக்கு 39.40% பேரும், மு.க.ஸ்டாலினுக்கு 60.60% பேரும் ஆதரவாக கருத்டு தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 16,846 பேரில் கலைஞர் கருணாநிதிக்கு 6,637 பேரும், ஸ்டாலினுக்கு 10,209 பேரும் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil