பள்ளிக்குழந்தைகள் 25 பேர் வாந்தி மயக்கம்… மதிய உணவால் ஏற்பட்ட பிரச்சனையா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:43 IST)
சிதம்பரம் அருகே ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன்று சாப்பிட்ட முட்டை அழுகிய நிலையில் இருந்ததால் புட்பாய்சன் ஆகி இருக்கலாமா என்ற கோணத்தில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments